உங்கள் கவனத்திற்கு

 • ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ளவர்தான் இவ்விண்ணப்பத்தை நிரப்ப இயலும்.
 • மின்னஞ்சல் (e-mail Id) முகவரி கண்டிப்பாகத் தேவை.
 • நட்சத்திரக் குறியிடப்பட்டவற்றை கண்டிப்பாக நிரப்ப வேண்டும்.
 • தமிழில் நிரப்ப ‘அ’ என்ற கட்டத்தைச் சொடுக்கவும். தமிழ்நாட்டைத் தவிர்த்து பிற மாநிலங்களில், பிற நாடுகளில் வசிப்போர் தங்களின் முகவரி விவரங்களை ஆங்கிலத்திலேயே பதிவு செய்யவும்.
 • பதிவு செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு இலவசப்பதிவு செய்வோரின் விவரங்களை எங்கள் பயன்பாட்டாளர்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும்.
 • எனினும் இலவசப் பதிவு செய்வோர், முன்பே பதிவு செய்துள்ள எங்கள் பயன்பாட்டாளர்களின் (தோழர்/ தோழியர்) விவரங்களையும் முழுமையாகப் பார்க்க வேண்டுமெனில், பயன்பாட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
 • ஓர் ஆண்டுக்கான பயன்பாட்டுக் கட்டணமாக ரூ.1000/- மட்டும் செலுத்தினால் போதுமானது. இதர கூடுதல் கட்டணங்களோ, மதிப்புக் கூடுதல் சேவையோ கிடையாது.
 • பயன்பாட்டுக் கட்டணத்தை Debit Card, Credit Card, Net Banking ஆகியவற்றின் மூலமாகச் செலுத்தலாம்.
 • விண்ணப்பதாரரின் தெளிவான இரண்டு வெவ்வேறு அளவுள்ள (மார்பளவு, முழு உருவம்) ஒளிப்படங்களைப் (Digital / Scanned Photo) பதிவிட வேண்டும். குறைந்தது ஒன்றேனும் அவசியம்.
 • விண்ணப்பதாரரின் கையொப்ப மாதிரி பதிவேற்றப்பட வேண்டும்.
 • வாக்காளர் அடையாள் அட்டை (Voter ID), வருமானவரி அட்டை (PAN Card), ஓட்டுநர் உரிமம் (Driving License), கடவுச்சீட்டு (Passport) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிவருடப்பட்ட நகலைக் (Scanned Copy) கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
 • குடும்ப அட்டையின் (Family Card) ஒளிவருடப்பட்ட நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
 • மாற்றுத் திறனாளியாக இருந்தால், அதற்குரிய சான்று கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
 • விதவையர் (ஆண், பெண்) எனில், மறைந்த தங்கள் இணையரின் இறப்புச் சான்றிதழை (Death Certificate) கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
 • பதிவேற்றப்படும் கோப்பு ஒவ்வொன்றும் அதிக அளவாக 2 MB -க்குள் இருக்க வேண்டும்.
 • பதிவேற்றப்படும் படங்கள் jpg, gif, png வடிவிலும், கோப்புகள் jpg, gif, png, pdf ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
 • ஆம். தங்களிடம் இத்தனை சான்றுகள் கோருவதைப் போலவே தான், அனைவரிடமும் பெறப்படுகிறது என்பதைத் தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறோம். பதிவு செய்யப்படும் தகவல்கள் குறித்து முழுமையாக எங்களால் சான்றளிக்க முடியாது எனினும், கூடுமானவரை தகவல்களை ஆவணங்களுடன் பெறுவது, அவற்றின் சரித்தன்மையை உறுதி செய்யவே!